சாதிகள் இல்லையடி பாப்பா,
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
பாரதியே நீ அன்று கண்ட கனவு
இன்றும் கனவாகவே.........
நீ கண்ட புதுமை பெண்ணாய், நானும் கனவு காண்கிறேன்,
என்றாவது ஒரு நாள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில்!!!!
கனவுகள் நிஜமாகும் நாளில் நான் இல்லாமல் போனாலும்,
சாதியற்ற மனிதகுலம் உமக்கு சாட்சி சொல்லும்.