Saturday, 19 May 2007

காதலே உயிர் கொடு

என் வீட்டு ரோஜா பூத்து சிரித்த போது,
நான் கொண்ட காதலை சொல்லவில்லையா!

என் வீட்டு மாடியில் மேகங்கள் செதுக்கிய
சிற்பங்கள் சொல்லவில்லையா நான் கொண்ட காதலை!!

நான் சுவாசித்து விட்டுச் சென்ற காற்று,
என் மூச்சில் நீ இருப்பதை உணர்த்தவில்லையா!!!

இயற்க்கையின் மொழி கொண்டு காதல் அனுப்பியுள்ளேன்,
பதில் கொடுத்து விரைவில் உயிர் கொடு!!!!

4 comments:

சுந்தர் / Sundar said...

கவுஜ ... கவுஜ...

Anonymous said...

good one ...



thottarayaswamy.a
www.pagadai.blogspot.com

Shruthi said...

உங்களோட கவிதைகளை படிச்ச பிறகு, வஞ்ச புகழ்ச்சியில் இந்த பின்னூட்டம் கொடுத்து இருக்கீங்களோன்னு தோனுது Mr.Anonymous. Anyway Thanks :)

Anonymous said...

உங்களுக்குள் இருக்கும் 'சுருதி' புரிகிறது. அழகாக எழுதுகிறீர்கள். எல்லாம் நலமாக இறைவனை வேண்டுகிறேன்