நான் முதல் முறையா வெளிநாடு போகறதுக்காக flight-ல ஏறி உட்காந்து இருந்தேன். ஜன்னல் இருக்கை கிடைக்காத வருத்ததில இருந்தேன். எனக்கு பக்கதில ஜன்னல் இருக்கைல ஒரு வெள்ளைக்கார பெண் இருந்தாங்க. அவங்க South Africa-ல இருந்து வற்ரேன்னு சொல்லி அறிமுகப்படுத்திகிட்டாங்க. நான் ஜன்னல எட்டி எட்டி பாக்கறத பாத்திட்டு அவங்களே பெரிய மனசு பண்ணி எனக்கு அவஙக இருக்கைய கொடுத்தாங்க. வானமே எனக்கு சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்க்கிற மாதிரி சந்தோஷமா இருந்துச்சு :) உலகமே ரெம்ப சின்னதா ஆன மாதிரி இருந்தது....அங்க இருந்து மேகம், கடல், மலை, இதெல்லாம் ரசிக்கிறது தனி சுகம்.
அந்த வெள்ளைக்கார பெண் என் கூட பேசிட்டே வந்தாங்க. எனக்கு ஆங்கிலத்தில பேசறதுன்னாலே கொஞ்சம் கஷ்டம், அதிலும் ஒரு வெளிநாட்டு பெண் கூட பேசறது இன்னும் கஷ்டம். நம்ம நாட்டோட கலாச்சாரம் மற்றும் மொழி பற்றி எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு வந்தாங்க, நம்ம தமிழ் பற்றி பேசறதுக்கு ஆங்கிலம் என்ன எந்த தெரியாத மொழியில் கூட பேசற அளவுக்கு தமிழ் மேல நம்பிக்கை. நானும் பெருமையோடு சொல்லிட்டே வந்தேன்.
அவங்க Mid-wife வேலை பார்க்கிறதா சொன்னாங்க. எனக்கு அப்படீன்னா என்ன என்று புரியல, சரி அப்புறமா நம்ம google கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பொதுவா அப்படியான்னு மண்டைய மட்டும் ஆட்டி வைச்சேன், அது எவ்வளவு பெரிய தப்புனு அப்ப தெரியல :( அவங்களோட தொழிலை மிகவும் நேசிப்பதா சொன்னாங்க, அதோட அவங்க தொழிலோட பெயரை எல்லா மொழியிலும் தெரிஞ்சுக்கனும்னு ஆசை வேற அவங்களுக்கு, ஒரு இலங்கை தோழி இருக்கறதாகவும், சிங்களத்தில அவங்க தொழிலோட பெயரை எழுதி கொடுத்ததா சொன்னாங்க. அதே மாதிரி நிறைய மொழிகளில் தெரிஞ்சு வச்சுறுக்காங்க. தமிழிலும் தெரிஞ்சுக்கனும்னு என்கிட்ட எழுதி தர சொன்னாங்க.
எனக்கு என்ன பண்றதுன்னு புரியல, அவங்ககிட்டயே mid-wife-னா என்ன என்று கேட்கலாம்னு நெனச்சா முன்னாடியே தெரிஞ்ச மாதிரி மண்டைய வேற பலமா ஆட்டி வச்சிருந்தேன் :(. இந்த பாலா போன ego இடம் கொடுக்கல. சரி நம்ம தமிழ்-ல பிரித்து எழுதி பொருள் கண்டு பிடிப்போம் இல்ல அது மாதிரி முயற்சி செய்யலாம்னு mid + wife என்று பிரிச்சு பார்த்து யோசிச்சு பாத்தேன்.
என்னோட மூளைக்கு எட்டிய வரைக்கும் wife என்றால் மனைவி mid என்றால் நடுவில், அதனால நானா ஒரு முடிவுக்கு வந்திட்டேன் ஏதோ அது மனைவிக்கு நிகரான ஒரு வேலைனு. அவங்களோட தொழில வேற அவங்க நேசிக்கறதா சொல்லி இருந்தாங்க இல்லையா, அதையும் இதையும் சேர்த்து கணக்கு போட்டு அது கண்டிப்பா குழந்தை பெற்றெடுக்கிற வேலையா இருக்கும்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன். நம்ம ஊர்ல வேனா இது பொதுவான தொழிலா இல்லாம இருக்கலாம், அங்க இருக்கலாம்-னு நானா ஊகிச்சுகிட்டேன். குழந்தை இல்லாதவங்கலுக்காக இவங்க கருவை சுமக்கிற புனிதமான வேலை பண்றாங்கன்னு நெனச்சுக்கிட்டேன்.
கடைசியா நான் யொசிச்சு அவங்களுக்கு எழிதி கொடுத்த வார்த்தை என்ன தெரியுமா, வாடகை தாய். அதையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தேன். நான் அறைக்கு வந்த உடனே முதல் வேலையா google-அ தட்டி பார்த்தா, அது special nurse during pregnancy and delivery அப்படீன்னு அப்ப தான் தெரியுது. Its too late :(
அவங்கள திரும்ப ஒரு தடவை சந்திக்க முடிஞ்சா நான் தமிழுக்கு செய்த துரோகத்த சரி பண்ணிடலாம், ego எல்லாம் கூட தூக்கி போட்றலாம் !!!! ஆனா இவ்வளவு பெரிய உலகத்தை விமானத்தில ஜன்னல் இருக்கைல இருந்து கூட சின்னதா மாற்ற முடியாதே :(
இத என்னோட அருமை தோழிகளிடம் சொன்னப்ப ஒரு வாரத்துக்கு என்ன பார்க்கிறப்ப எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. எனக்கு ஒரே ஒரு சின்ன சந்தோஷம், என்னோட ஆங்கில வார்த்தை வங்கியில் ஒரு வார்த்தை சேர்ந்தது தான்.
Friday, 29 December 2006
Mid-wife-க்கு அர்த்தம் அறிந்த கதை.......
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல பதிவு ! ..
பொய் சொன்னாலும்!!!!........என்னை ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி சுந்தர்
தமிழ் உங்களை மன்னிக்காது ..... ( பொய் இல்ல )
ஸ்ருதி,
இதை படிச்சவுடனே எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.
:-)
சுந்தர், ராம்,
படிச்சதோட மட்டுமில்லாமல் comment கொடுத்ததற்கும் மிக்க நன்றி
sundry shop.இது என்னவென்றே எனக்குத் தெரியாது.இதைப் போய் என்னிடம் அர்த்தம் கேட்டார்கள் என் நண்பர்கள்.Sun= சூரியன் dry=காய வைப்பது...மொத்தமாக ஏதோ சலவைக் கடை என்று யூகித்துக் கொண்டேன்.என் மானமும் கப்பல் ஏறி விட்டது.இதில் நம் தப்பு ஒன்றும் இல்லை.ஆங்கிலம் என்பது எனது தாய் மொழி இல்லை.இது மற்றவர்களுக்குப் புரியவில்லை.நம்மைப் போல பலர் இருப்பார்கள்.என்ன இதைப் பற்றி வெளியே கூற மாட்டார்கள்.பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் என்று போக வேண்டியதுதான்.இப்படி எல்லாம் வசனம் பேசிதான் மனதைத் தேற்றிகொள்கின்றேன்
நன்றி துர்கா உங்களோட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு. ஆனா sundry shop என்றால் என்னனு நீங்க சொல்லவே இல்லையே
பலசரக்குக் கடை இதுதான் தமிழில் அர்த்தம் என்று நினைக்கின்றேன்.
நன்றி துர்கா....
"செவிலித்தாய்" அப்படின்னு நினைக்கிறேன்!
ஆனா முதல்ல படிக்கும் போது உங்கல மாதிரி தான் நினைச்சேன்! - சுரேஷ்
Post a Comment