Tuesday 3 July 2007

உனக்கும் எனக்கும்



உன்னை எழுப்பிய சூரியன் தான்
என் பகலையும் எழுப்பிச் சென்றது

நீ கண்டு ரசித்த நிலவு தான்
என் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்த்துச் சென்றது

நீ எண்ண முயற்ச்சித்து தோற்றுப் போன நட்சத்திரங்களிடம் தான் நானும் தோற்றுப் போனேன்

உன்னை தினம் சுமக்கின்ற பூமி தான் என்னையும், என்னில் உள்ள உன்னையும் சேர்த்து சுமக்கின்றது

உனக்கு சுவாசம் கொடுத்த காற்று தான்
எனக்கும் கொடுத்துச் சென்றது

உன்னை தொட்டுச் சென்ற காதல் தான்
என்னையும் வருடிச் சென்றது

இவையனைத்தும் உனக்கும் எனக்கும் ஒன்றாய் இருக்க,
கல்யாணம் என்றதும் நீ மேல் சாதியானாய் நான் கீழ் சாதியானேன்!

2 comments:

சுந்தர் / Sundar said...

முதலில் ...
கவிதை .. அருமை ...

வார்த்தைகளின் கையாடல் Simply Superb ..

இரண்டாவது ...
கவிதை விதைக்கும் அர்த்தங்கள் அர்த்தமானவை .

பாராட்டுக்கள் .

Shruthi said...

சுந்தர், மிக்க நன்றி பாராட்டுக்களுக்கு !!!!!!!!!