Tuesday, 28 August 2007

உயிரை மட்டுமாவது திருப்பி கொடு


உனக்காக காத்திருந்த ஒவ்வொரு வினாடியையும்
திருப்பிக் கேட்கவில்லை

பெற்றோரிடம் இழந்த நம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த அன்பான உறவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த இளமையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த தன்னம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சுயமரியாதையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த கனவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த காதலை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சிரிப்பை
திருப்பிக் கேட்கவில்லை

உனக்குள் இருக்கும் என் உயிரை மட்டும் தான்
திரும்பக் கொடு என்கிறேன்!

நீயொ, கண்ணீர் மட்டும் தருகிறேன்,
காலம் முழுவதும் வைத்துக்கொள் என் நினைவாக என்கிறாய்!!

Tuesday, 21 August 2007

கற்றுக் கொடுத்த அப்பா


நடை வண்டியில் நடைபயில கற்றுக் கொடுக்கையில்,
விழாமல் இருக்க அப்பாவின் கரம் அருகிலேயே

மூன்று சக்கர சைக்கிளில் தள்ளி விட்டுக் கொண்டே
பின்னால் நடந்து வரும் அப்பாவின் கால்கள்

இரு சக்கர சைக்கிள் பழகிக் கொடுக்க,
பின்னால் மூச்சிரைக்க ஓடி வரும் அப்பா

TVS-50 ஓட்டப் பழகும் போது தூரத்திலிருந்தே
கவனிக்கும் அப்பாவின் பயம் கலந்த பாசப் பார்வை

இன்று, பக்கத்து இருக்கையில் பெருமிதத்துடன் அப்பா
நான் காரில் அவரை ஏற்றிக் கொன்டு செல்கையில்

Tuesday, 14 August 2007

அறுபது ஆண்டு சுதந்திரம்

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம்
எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே!

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே.
--பாரதி

Monday, 13 August 2007

நீ சொல்லும் வரை.......


மாமா மகனுக்கு கல்யாணம், பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டான்,
உங்களுக்கு எப்போது என்று!

பக்கத்து வீட்டுப் பையனின் திருமண ஆல்பத்தை பார்க்கும் போது கேட்டான்,
உங்களை இப்படி எப்போது பார்ப்பது என்று!

உடன் வேலை பார்க்கும் தோழி, மாப்பிள்ளையின் புகைபடத்தை காட்டி விட்டு கேட்டாள், உங்களவரை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று!

அண்ணி குழந்தைக்கு விளையாட்டு காட்டி சோறூட்டும் போது கேட்டாள்,
எப்போது என் மகனுக்கு பெண் பிள்ளை பெற்று தர போகிறீர்கள் என்று!

அக்கா மகனை தூங்க வைக்கும் போது, உன் பிள்ளையின் தொட்டிலை எப்போது ஆட்ட போகிறாய் என்றார் அக்காவின் கணவர்!

அமெரிக்காவில் வசிக்கும் அன்புத் தோழியிடம், எப்போது இந்தியா வருகிறாய் என்று கேட்டால், உன் திருமணத்திற்க்கு வருகிறேன் தேதியை சொல்லு என்கிறாள்!

எல்லாருக்கும் பதிலாக ஒரு சிறு புன்னகை மட்டும்!!!!!!