Monday 1 January 2007

Mind the Gap........

நானும் எனது நண்பனும் லண்டனிலிருந்து இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம் அவனுடைய cousin வீட்டுக்கு, அன்று அவனுடைய cousin வீட்டில் கார்த்திகை தீபம் கொண்டாடுவதாதக சொல்லி இருந்தான், அத்னால் jeans போடறதுக்கு பதிலா சுடிதார் போட்டுட்டு போலாம்னு ஒரு சுடிதார் போட்டுட்டு அதுக்கு shoe போட்டா நல்லா இருக்காதுன்னு செருப்பே போட்டுகிட்டேன் அந்த கடுங்குளிறுலும்.

நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இறங்குவதற்க்கு தயாராக இருந்தோம். நிறைய பேர் இறங்க வேண்டி இருந்ததால் வரிசையாக வாசலில் நின்று கொண்டு இருந்தோம். எனக்கு முன் எனது நண்பன் நின்று கொண்டு இருந்தான், எனக்கு பின் ஒரு வெள்ளைக்கார தாத்தா நின்று கொண்டு இருந்தார்.

ஒரு சில இரயில் நிலையங்களில், platform- க்கும் train-க்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கும் அதனால் அங்கு "mind the gap" என்று எச்சரிக்கை கொடுத்திட்டே இருப்பாங்க, அதோட இறங்கற இடத்தில எல்லாம் எழுதி வச்சிருப்பாங்க. இந்த வசனம் அங்க பிரபலமான ஒன்று வேற, "mind the gap" என்று t-shirt ல எல்லாம் எழுதி வச்சு விப்பாங்கன்னா பாத்துக்கோங்க எவ்வளவு பிரபலம்னு

இரயில் நின்றவுடன் எல்லாரும் வேகமா இறங்கிக் கொண்டு இருந்தார்கள், நான் மட்டும் "mind the gap" எச்சரிக்கைய மனசில வச்சிட்டே கொஞ்சம் மெதுவாக இறங்கினேன். இதுவே நம்ம ஊர்-ல இருந்தா இந்த மாதிரி எச்சரிக்கை எல்லாம் காதுல கூட விழுந்து இருக்குமான்னு தெரியல :). விதிகளை மதிக்க தேவையில்லைங்கற எண்ணம் இல்ல, ஒரு confidence-னு கூட வச்சுக்கலாம்.

நான் மெதுவா இறங்கிட்டு இருந்தேன், எனக்கு பின்னாடி இருந்த வெள்ளைக்கார தாத்தா வேகமா இறங்கிறதுக்கு வந்தார், அவருக்கு அவங்க ஊர் தான அப்படீங்கற confidence :) ஆனா அவர் என்னொட செருப்ப மிதிச்சிட்டார் வேகமா வந்ததால. என்னோட ஒரு செருப்பு மட்டும் platform-க்கும் train-க்கும் இடையில் உள்ள இடைவெளியில் விழுந்திடுச்சு :(. செருப்பு இல்லாம வெறும் காலோட அந்த குளிர்ல தரைல நிக்கறது எவ்வளவு கஷ்டம்னு அனுபவிச்சா தான் தெரியும்.

இதுவே நம்ம ஊரா இருந்தா train போனவுடன் platform-ல நம்மலே இறங்கி எடுத்திடலாம், இந்த ஊர்ல அதுக்கும் பயமா இருந்தது, platform-ல இறங்கினா எங்க பிடிச்சு உள்ள வச்சிருவாங்கலோன்னு. நம்ம ஊர் jail-யே சினிமால தான் பாத்து இருக்கேன், இந்த ஊர் jail-a நேர்ல பாக்க வேண்டி வந்திட கூடாது இல்லையா, அப்படியே வந்தாலும் நம்ம ஊர் jail-a பாக்காம இந்த ஊர் jail-க்கு போக கூடாதுன்னு platform-ல இறங்கி நம்மலே இறங்கி எடுக்க வேண்ட்டாம்னு முடிவு பண்ணி எனது நண்பன் செருப்ப எடுக்கறதுக்கு யாராவது guard இருக்காங்கலான்னு பாக்க போனான், நான் train போன உடனே அந்த இடத்திலேயே நின்னுட்டு இருந்தேன்.

நல்ல வேலையா அங்க ஒரு guard இருந்தார், அவர் எனது நண்பனோட வந்து வெளிய எட்டி பார்த்தார், நான் கொஞ்ச தூரத்தில நின்னுட்டு இருந்தேன், அவர் இருந்த இடத்தில இருந்தே என்ன பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சிட்டு உள்ள போய்ட்டார், சரி ஏதாவது நீளமான stick எடுத்திட்டு வர போய்ட்டாருன்னு நினைச்சேன். உள்ள போன ரெண்டு பேரையும் ஒரு 5 நிமிஷ்த்துக்கு வெளிய காணோம், என்னடா இது வம்பா போச்சு இப்படீயே இந்த குளிர்ல எவ்வளவு நேரம் நிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன், கொஞ்ச நேரம் ஆனவுடன் வேற ஒரு guard எனது நண்பனுடன் ஒரு நீளமான stick எடுத்திட்டு வந்தார். அப்பாடான்னு அப்ப தான் நிம்மதியா இருந்தது. அவர் வந்து செருப்ப எடுத்து கொடுத்திட்டு போய்ட்டார்.

அதன் பிறகு என் நண்பன் சொன்னத கேட்டு குளிரெல்லாம் மறந்து சிரிச்சிட்டே போனோம். அப்படி என்ன சொன்னான் தெரியுமா, முதல் வந்த guard கிட்ட போய் இப்படி சொல்லி இருக்கான் "my friend's footwear has fallen down in the platform"-னு. அவருக்கு footwear-na என்னனு புரியல, அதனால அவர் வெளிய வந்து எட்டி பாத்திட்டு எனது நண்பன் கிட்ட சொன்ன வார்த்தை "she didnt fall down, she is standing on the platform only"-னு. அவர் என்னோட பெயரை footwear-னு நெனச்சுகிட்டாரான்னு தெரியல. அப்புறம் எனது நண்பன் வேற ஒரு guard-க்கு தெளிவா விளக்கி கூட்டிட்டி வந்து இருக்கான் :)

எனது நண்பனோட cousin வீட்டுக்கு போய் கார்த்திகை தீபம் special சாப்பாட வடை பாயாசத்தோட ஒரு புடி புடிச்சேன். லண்டன் வந்து வடை பாயாசத்தோட எத்தனை பேருக்கு சாப்பாடு கெடைக்கும். இங்க வந்து நம்ம ஊர் full meals சாப்பிடறது தனி சுகம் தான் போங்க !!!

9 comments:

சுந்தர் / Sundar said...

தலைப்பை " Mind the Gap " அப்படினு வைச்சிருந்தா ... இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்
நிகழ்வுகளை ... அழகாக பதிவதற்க்கு வாழ்த்துக்கள் ..

Shruthi said...

ம்ம்ம்....நல்ல தலைப்பா இருந்திருக்கும். இனிமேல் publish பன்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட suggestion கேட்கலாம் போல. நன்றி சுந்தர்!

பாரதிய நவீன இளவரசன் said...

ஸ்ருதி, வெளியூர்/வெளிநாடு என்றால், நாம் miss பண்ணும் சில முக்கியமான விஷயங்களில் நமக்கு இஷ்டமான சாப்பாடும் ஒன்று. நல்ல அனுபவம். நல்ல பதிவு.

Shruthi said...

சரியாக சொன்னீர்கள் :)
நன்றி வெங்கடேஷ்...

சத்தியா said...

ம்ம்... நல்ல அனுபவம்தான் சுருதி.

ISR Selvakumar said...

I too had wonderful unforgetable experiences in Switzerland, this reminded me those memories. Thanx buddy.

ISR Selvakumar said...

As suggested by Sundar edit the title as "Mind the Gap", special thanx to bharateeyamodernprince for mentioning about the "Sappadu"

Shruthi said...

சுந்தர், செல்வகுமார்,
உங்கள் இருவரின் கருத்துப்படி தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது :)
இது மாதிரி கருத்துக்களை தொடர்ந்து உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்

சத்தியா உங்களுடைய வரவுக்கு நன்றி

சுந்தர் / Sundar said...

Thanks for taking the advice .